ஓட்டப்பிடாரம் அருகே திருமணமாகாத விரக்தியில் லாரி ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலும் மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கதுரை என்பவரின் மகன் சுபாஷ் (27) இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார், இவருக்கு பல ஆண்டுகளாக பெண் தேடியும் கிடைக்காததால் மனவிரத்தில் இருந்த சுபாஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், இது குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.