தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் கோவிந்த லச்சக்கணக்கான பக்தர்கள்!
ஆறுபடை வீடுகளில் ஒன்றானதூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, முருகப்பெருமானை தரிசிக்க தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை யாக வந்து அழகு குத்தியும், காவடி எடுத்தும்,பால்குடம் எடுத்தும் வழிபாடு நடத்தி கடலில் புனித நீராடினர்.தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை ஒரு மணி அளவில் நடை திறக்கப்பட்டு திருச்செந்தூர் முருக கடவுளுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.