தூத்துக்குடி அருகே மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழப்பு.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள சிவஞானபுரம் கிராமத்தை சேர்ந்த வேலுசாமி என்பவரின் மகள் சீதாலட்சுமி (19), இவர் வீட்டில் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தபோது, இரும்பு கதவை பிடித்தபோது, சீதாலட்சுமி மீது கதவில் இருந்து எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சீதாலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சாயர்புரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.