தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் முஸ்லிம் தெரு பகுதியை சேர்ந்த முகமது ஷேக், இவரது மனைவி நிஷா இத்தம்பதியினரின் (4) வயது சிறுவன் சிந்தாமதார். சிந்தாமதா மற்றும் தாய் நிஷா ஆகியோர் ஸ்ரீவைகுண்டம் ஆற்றில் சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறையில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சிந்தமாதர் ஆற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து உடலை மீட்ட ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.