கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்ற  நீதிபதி  மதிப்பிற்குரிய  கனம் திரு. சுவாமிநாதன் அவர்கள் 7 வருடங்கள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதமும்  விதித்து  தீர்ப்பு - இவ்வழக்கை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு 10 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் கோவில்பட்டி மேல இலைந்தைகுளம் பகுதியை சேர்ந்த  பலவேசம் மகன் சுப்பிரமணியன் (எ) பாலசுப்பிரமணியன் (45) என்பவரை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கை அப்போதைய கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ஸ்டெல்லபாய் புலன் விசாரணை செய்து கடந்த 20.02.2018 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி திரு. சுவாமிநாதன் அவர்கள் இன்று (22.04.2024) குற்றவாளியான சுப்பிரமணியன் (எ) பாலசுப்பரமணியன் என்பவருக்கு 7 வருடங்கள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ஸ்டெல்லாபாய் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் திருமதி. முத்துகுமாரி அவர்களையும், விசாரணைக்கு உதவியாக இருந்த முதல்நிலை பெண் காவலர் திருமதி. கவிதா ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்.