தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனையில் அமைந்துள்ள சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் ஸ்ரீ கைலாசநாத சுவாமி திருக்கோவில் சித்திரை திருவிழாவின் கொடியேற்றம் கடந்த 14ம் தேதி அன்று வெகு விமர்சையாக நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து 10 நாள் திருவிழாவில் தினந்தோறும் ஆனந்தவள்ளி மற்றும் கைலாசநாதர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார். இதனைத் தொடர்ந்து பத்தாம் நாள் தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஆனந்தவல்லி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் சிறப்பு தீபாதாரணை நடைபெற்றது. பின்னர் திருத்தேரில் எழுந்தருளி ஆனந்தவல்லி சமேத  கைலாசநாதர் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார், இதனைத் தொடர்ந்து மேளதாளம் முழங்க வீதிகளில் திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.  இந்நிகழ்வில்  பசுவந்தனை ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி சிதம்பரம்,அறங்காவலர் குழு தலைவர் ராமானுஜம்,போடு பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பழனி பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்,நான்குரத வீதிகளில் வந்த சுவாமி மற்றும் அம்பாளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் மனமுருகி தரிசனம் செய்தனர்.