தூத்துக்குடி
மாவட்டம் சாத்தான்குளம் சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன்
ஜான்ராஜ் (57), இவர் கடந்த 2017ம் ஆண்டு அப்பகுதியில் தெருவில் விளையாடிக்
கொண்டிருந்த 10 வயது மற்றும் 8 வயது சிறுமிகளுக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய
போலீசார் ஜான்ராஜை கைது செய்தனர்.இதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் அனைத்து மகளிர்
காவல் நிலைய ஆய்வாளர் திருமதி சாந்தி புலன் விசாரணை மேற்கொண்டு கடந்த 27-07-2018 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.
இதேபோல் தூத்துக்குடி சக்தி நகர் பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகன் மணிகண்டன் (26), என்பவர் கடந்த 2021ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள 16 வயது சிறுமியை திருமண ஆசை கூறி பாலியல் வன்முறை செய்த வழக்கில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.இதனை அடுத்து தூத்துக்குடி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா கடந்த 08-02-2022 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
முதியவர் ஜான்ராஜ் வழக்கு தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது, வழக்கின் விசாரணையில் குற்றவாளியான ஜான்ராஜ் என்பவருக்கு 14 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும் மற்றும் ரூபாய்,20000 அவதாரமும் விதித்து அதிரடியாக நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதேபோல் 16 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறை செயலில் ஈடுபட்ட மணிகண்டனின் வழக்கு விசாரணை தூத்துக்குடி மகிலா நீதிமன்றத்தில் நடைபெற்றது, வழக்கின் விசாரணையில் குற்றவாளியான மணிகண்டனுக்கு 10 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய்,2000 அவதாரம் விதித்து நீதிபதி மாதவ ராமானுஜம் அதிரடியாக தீர்ப்பு வழங்கினார். சிறுமிகளிடம் பாலியல் வன்புணர்ச்சி ஈடுபட்ட இருவருக்கும் 22-04-2024 திங்கள் கிழமை ஒரே நாளில் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்பட்டது, தூத்துக்குடி முழுவதும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.