தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 கைது.
தூத்துக்குடி பூபல்ராயபுரம் மீன் மார்க்கெட் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த, தூத்துக்குடி சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் பிரபு வினோத்குமார் (27) மற்றும் அண்ணா நகர் பகுதி சையது சர்தார் மகன் ருக்மேன் ஹக்கீம் (29) ஆகிய இருவரையும், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 300 கிராம் கஞ்சா மற்றும் ஒரு கத்தியையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.