தூத்துக்குடியில்  ஜாமீனில் வெளிவந்தவர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதி சேர்ந்த விக்னேஷ்(32) மற்றும் அவரது நண்பர் செல்வகுமார் (28) ஆகியோர் இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி சொட்டையன் தோப்பில் உள்ள விக்னேஷின் அண்ணன் கபில்தேவ் என்பவரை வீட்டில் தங்கியிருந்தனர்.இந்நிலையில் விக்னேஷ் ரத்த காயத்துடன் திடீரென மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விக்னேஷின் உடலை கைப்பற்றிய தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.