தூத்துக்குடி மேலூர் மேல்மருவத்தூர்ஆதிபராசக்தி அம்மன் ஆலய ஆடிப்பூர விழாவை முன்னிட்டு 1008 பெண்கள் கஞ்சி கலயத்தை சுமந்தபடி ஊர்வலம் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு பூஜை .
தூத்துக்குடி மேலூரில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் ஆலயத்தில் கொண்டாடப்படும் விழாக்களில் முக்கியமானது ஆடி மாதம் வரும் ஆடிப்பூர விழாவாகும் கடந்த வெள்ளிக்கிழமை கலச விளக்கு வேள்வி பூஜை உடன் துவங்கிய ஆடிபுர விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மனுக்கு கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதையொட்டி 1008 பெண்கள் தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவிலில் இருந்து பெண்கள் தலையில் கஞ்சி கலயத்தை சுமந்தபடி ஊர்வலமாக சிவன் கோவில் தேரடி, தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், உள்ளிட்ட வழியாக சென்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் ஆலயத்தை அடைந்தனர். பின்பு அம்மனுக்கு பெண்கள் கஞ்சி வார்ப்பு செய்தனர். ஆதிபராசக்தி அம்மனுக்கு பாலாபிஷேகம் உள்ளிட்ட அபிஷேகம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் பக்தர்களுக்கு கஞ்சி பிரசாதமாக வழங்கப்பட்டது.
ஆன்மிகம்
1008 பெண்கள் கஞ்சி கலயத்தை சுமந்தபடி ஊர்வலம் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு பூஜை .
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மணிப்பூர் கலவரம்- மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் .
அடுத்த
பனிமய மாதா அன்னை தங்க நற்கருணை பேழை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலம்.
இதையும் படிக்கலாம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி உட்பட மூன்று பேர் கைது!
30 Sep 2026
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026