தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சுதாகர் என்பவர், காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த திருமணமான பெண் ஒருவரின் கைபேசி எண்ணை அவரது புகாரில் இருந்து எடுத்து போன் செய்து "வீட்டிற்கு வரவா..." என்று இரட்டை அர்த்தத்தில் பேசி அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இதனால் அப்பெண், "எஸ்.ஐ சுதாகர் தனக்கு அடிக்கடி போன் செய்து அசிங்கமாக பேசுகிறார்" என்று தனது கணவரிடம் கூறியுள்ளார். இதுபற்றி அப்பெண்ணின் கணவர், உதவி ஆய்வாளர் சுதாகரிடம் சென்று இதுபோன்று தன் மனைவியை தொந்தரவு செய்யாதீர்கள் எனக் கேட்டுக்கொண்டதற்கு "உன்னை கைது செய்து உள்ளே வைத்துவிடுவேன்..." என மிரட்டியுள்ளார். இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் மனமுடைந்த அப்பெண்ணும், அவரது கணவரும் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் நேரில் சென்று புகார் அளித்தனர். அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்டக்காவல் கண்காணிப்பாளர் உடனடியாக விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுதாகரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
மேலும், கடந்த 2 தினங்களுக்கு முன்புதான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனால், உதவி ஆய்வாளர் சுதாகருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஒழுங்கு நடவடிக்கை காரணமாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Vilathikulam
பாலியல் புகாரில் சிக்கிய விளாத்திகுளம் உதவி ஆய்வாளர் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தமிழகத்தில் 600 க்கு மேற்பட்ட குழந்தைகள் காணவில்லை?
அடுத்த
பாலியல் புகாரில் சிக்கிய விளாத்திகுளம் எஸ்.ஐ. அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றம்!
இதையும் படிக்கலாம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி உட்பட மூன்று பேர் கைது!
30 Sep 2026
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026