விளாத்திகுளம் அருகே ராணுவ வீரர் கொலை குறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம் - மாவட்ட காவல்துறை எச்சரிக்கை.விளாத்திகுளம் அருகே ராணுவ வீரர் கொலை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்ப வேண்டாம் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வெம்பூர் காலனியைச் சேர்ந்த வேதமுத்து மகன் வேல்முருகன் (24) என்ற இராணுவ வீரர் கொலையுண்டுள்ளார். இது சம்மந்தமாக மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிய புலன் விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்த கொலை வழக்கு சம்மந்தமாக உண்மைக்கு புறம்பான செய்திகளையோ, வீடியோ, ஆடியோ போன்றவற்றை வாட்ஸ் ஆப் குழுக்கள், முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் யாரும் பதிவேற்றம் செய்ய வேண்டாம் என காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.வழக்கின் புலன் விசாரணையை பாதிக்கின்ற வகையில் சட்டத்தை மீறி உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் எச்சரித்துள்ளார்.
Vilathikulam
ராணுவ வீரர் கொலை குறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம் - மாவட்ட காவல்துறை எச்சரிக்கை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கோலாகலமாக நடைபெற்ற குலசை முத்தாரம்மன் தசரா இரண்டாம் ஆண்டு விழா!
அடுத்த
ராணுவ வீரர் கத்தியால் குத்திக் கொலை ஒருவர் கைது - பெண் தொடர்பு - முன்விரோதம் தான் காரணமா ?
இதையும் படிக்கலாம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி உட்பட மூன்று பேர் கைது!
30 Sep 2026
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026