தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள கீழஈரால் கிராமத்தில் ரூ.9.60 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலைவாய்ப்புத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மகளிர்க்கான பணிக்கூடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பணிக்கூடத்தினை திறந்து வைத்தார். மேலும் மேலக்கரந்தை கிராமத்தில் 37.15 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்தினை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேசுகையில் தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழு மூலமாக பெண்கள் சுயமாக நிற்கும் வகையில், வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. மேலும் தன்னம்பிக்கை, சுயமாக பணம் சம்பாதிக்கும் நிலையை உருவாக்கி தந்துள்ளது.வரும் செப்-15 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவுள்ளது. ஆட்சி பொறுப்பு ஏற்றதும் மகளிருக்கு அரசு பஸ்களில் கட்டணமில்லை என்ற திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி தந்துள்ளார். கல்லூரிக்கு செல்லம் பெண்களுக்கு ரூ.1000 உதவி தொகையை வழங்கி வருகிறது. பெண்களை பாதுகாக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது.