தூத்துக்குடி மாவட்டத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த  வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரிகள் 6 பேர்  இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - இந்த ஆண்டு இதுவரை 105 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைப்பு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில்ராஜ் இ.ஆ.ப அவர்கள் நடவடிக்கை.கடந்த 06.07.2023 அன்று தருவைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  தருவைக்குளம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள ஒரு கோவிலின் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் தூத்துக்குடி செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர்களான மந்திரம் மகன் சுந்தர் (எ) கோட்டை சுந்தர் (22), கொம்பையா மகன் கிருஷ்ணமூர்த்தி (19), முருகன் மகன் விக்டர் (19), தூத்துக்குடி அடைக்காலபுரம் பகுதியை சேர்ந்த லிங்கம் மகன் பாலசுப்பிரமணியன் (22) மற்றும் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி திருக்குறுங்குடி பகுதியை சேர்ந்த சேகர் மகன் சுந்தர் (எ) கோளாறு சுந்தர் (24) ஆகியோரை தருவைக்குளம் காவல் நிலைய போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சவையும் பறிமுதல் செய்தனர்.அதேபோன்று கடந்த 06.07.2023 அன்று விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விளாத்திகுளம் பேருந்து நிலையம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்த சண்முகையா மகன் அஜய் மாடசாமி (எ) மாடசாமி (41) என்பவரை விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.மேற்படி வழக்குகளின் எதிரிகளான சுந்தர் (எ) கோட்டை சுந்தர், கிருஷ்ணமூர்த்தி, விக்டர், பாலசுப்பிரமணியன், சுந்தர் (எ) கோளாறு சுந்தர் மற்றும் அஜய் மாடசாமி (எ) மாடசாமி ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க 2 காவல் நிலையங்களின் (பொறுப்பு)  காவல் ஆய்வாளர் திருமதி. விஜயலெட்சுமி அவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில்ராஜ் இ.ஆ.ப அவர்கள் தூத்துக்குடி செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர்களான மந்திரம் மகன் 1) சுந்தர் (எ) கோட்டை சுந்தர், கொம்பையா மகன் 2) கிருஷ்ணமூர்த்தி, முருகன் மகன் 3) விக்டர், தூத்துக்குடி அடைக்காலபுரம் பகுதியை சேர்ந்த லிங்கம் மகன் 4) பாலசுப்பிரமணியன், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி திருக்குறுங்குடி பகுதியை சேர்ந்த சேகர் மகன் 5) சுந்தர் (எ) கோளாறு சுந்தர் மற்றும் தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்த சண்முகையா மகன் 6) அஜய் மாடசாமி (எ) மாடசாமி ஆகிய 6 பேரையும்  குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) திருமதி. விஜயலெட்சுமி சுந்தர் (எ) கோட்டை சுந்தர், கிருஷ்ணமூர்த்தி, விக்டர், பாலசுப்பிரமணியன் மற்றும் சுந்தர் (எ) கோளாறு சுந்தர் ஆகிய 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், எதிரி அஜய் மாடசாமி (எ) மாடசாமியை மதுரை மத்திய சிறையிலும் அடைத்தார்.இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 12 எதிரிகள் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 8 எதிரிகள் உட்பட 105 எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.