ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம் - தீர்ப்பை வரவேற்று கோவில்பட்டி நகர காங்கிரஸ் சார்பில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பாக கோவில்பட்டி நகர காங்கிரஸ் சார்பில் தலைவர் அருண்பாண்டியன் தலைமையில் Dr AK மாறன் மாவட்டமருத்துவ அணி தலைவர் மாவட்ட செயலாளர் துரைராஜ், ஆகியோர் முன்னிலையில் இதனை வரவேற்று வருங்கால பாரத பிரதமர் ராகுல் காந்தி எனவும் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் எனவும் கோஷங்கள் எழுப்பினர் இதனையடுத்து பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு மாவட்ட பொருளாளர் கார்த்திக் காமராஜ் இனிப்பு வழங்கினார்.
மேலும் மனித உரிமை பிரிவு மாநில செயலாளர் c காளிதாஸ் INTUC ராஜா சேகரன PCC உறுப்பினர் திருப்பதி ராஜா,sc /st பிரிவு மாவட்ட தலைவர் கண்ணாயிரம் முத்து, மாவட்ட செயலாளர் ஜோஷ்வா,சுடலை மணி, பழனி சாமி, மகேந்திரன், ஆல்வின், ஆறுமுகம், கோபால், சுந்தர் ராஜ், சுமன், அய்யாதுரை, சூர்யமுர்த்தி, ரமேஷ், வேல்சாமி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தியா
ராகுல் காந்தியின் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு : காங்கிரஸ் கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் உட்பட தூத்துக்குடி மாவட்டத்தில் 105 பேர் குண்டர் சட்டத்தில் கைது.
அடுத்த
சீறிப்பாய்ந்த 50 ஜோடி மாடுகள்!