தூத்துக்குடி அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு .
தூத்துக்குடி மாவட்டம் செய்தங்கநல்லூர் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் முத்து பெருமாள் (32), இவர் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள சுந்தரபாண்டியசாஸ்தா திருக்கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த கார் முத்து பெருமாள் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்த முத்து பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செய்தங்கநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முத்து பெருமாளுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்..