திருச்சி விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி.க்கு உற்சாக வரவேற்பு! 


திருவாரூரில் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை நடத்தும் நமது 'வக்ஃப் நமது உரிமை என்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருச்சி விமான நிலையத்தில் வருகை தந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழத் தலைவருமான கனிமொழிக்கு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ., மற்றும் திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.