சாத்தான்குளம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி இளைஞர் உயிரிழப்பு.




தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள மாணிக்கபுரத்தை சேர்ந்த சண்முகவேல் என்பவரின் மகன் விஜயகுமார் (35), இவர் சமையல் வேலை செய்து வந்துள்ளார், இந்நிலையில் சமையல் வேலை செய்வதற்காக திசையன்விளை   சென்று கொண்டிருந்தபோது, பிரகாசபுரம் அருகே இவர் ஒட்டிவந்த இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத கார் மோதியதில் விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார், இதுகுறித்து தட்டார்மடம் காவல் நிலைய போலீசார் விசாரணை.