ஏரல் அருகே மனைவி கழுத்தறுத்து கொலை:கணவருக்கு போலீசார் வலை?
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் நம்மாழ்வார் பகுதியை சேர்ந்த மரிய சாமுவேல் (60),இவரது மனைவி ஜோஸ்பின்(57), இவர்களுக்கிடையே குடும்பத் தகராறு காரணமாக வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி ஜோஸ்பின் கழுத்தை அறுத்து மரியசாமுவேல் கொலை செய்து,பின்னர் உடலை ஊருக்கு வெளியே உள்ள காட்டுபகுதிக்கு துாக்கி சென்றார். அப்போது, ஆட்கள் நடமாட்டம் இருந்ததால், உடலை அங்கேயேபோட்டுவிட்டு, தலைமறைவானார். இதனிடையே ஜோஸ்பின் தம்பி ஜான் போஸ்கோ, தன் அக்காவை மாமா கொலை செய்தது தெரிந்து அதிர்சசி அடைந்தார். இதுகுறித்து ஜான் போஸ்கோ அளித்த புகாரின் பேரில் ஏரல் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய மரிய சாமுவேலை தேடி வருகின்றனர்.