ஸ்ரீவைகுண்டம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அனைவரதநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மகாராஜன் (35), இவர் அந்த கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடை பின்புறம் உடலில் வெட்டு காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார், இதனை அடுத்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் மகாராஜன் உடலை கை பற்றி விசாரணை மேற்கொண்டதில், முன்பகை காரணமாக மகாராஜனை வெட்டி கொலை செய்த அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார்(19) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.