தூத்துக்குடி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு!
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் சித்திரைவேல் (60), திரவியராஜ் (56) ஆகியோர் இருவரும் எட்டையாபுரம் சென்று விட்டு தூத்துக்குடிக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, தூத்துக்குடி அருகே உள்ள குறுக்குத்தலை தேசிய நெடுஞ்சாலையில் பின்னால் வந்த சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானதில், சித்திரவேல் மற்றும் திரவியராஜ் ஆகியோர் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் விபத்து ஏற்படுத்திய குரும்பூர் - துறையூரை சேர்ந்த சையது முகமது (37) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.