தூத்துக்குடியில் ரயிலில் வெளிமாநில மதுபாட்டில்களை கடத்தி வந்த வாலிபர் கைது!
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மைசூரில் இருந்து வந்த விரைவு ரயிலில் இருப்புப்பாதை காவல் நிலைய போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் பையை சோதனை செய்ததில் அவர் மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் சேர்வைக்காரனமடம், மேலத் தெருவைச் சேர்ந்த வெள்ளையா மகன் முத்துக்குமார் (28) என்பதும் பெங்களூரில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 24 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.