ஸ்ரீவைகுண்டம் அருகே கத்தியை காட்டி லாரி டிரைவரிடம் பணம் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது.
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் (51) இவர் லாரி ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் மெயின் ரோட்டில் தனது லாரியை நிறுத்திவிட்டு டயர்களை சோதனை செய்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த நாங்குநேரி சூர்யா மகன் ஜெயக்குமார் என்பவர் (20), ஆறுமுகத்திடம் கத்தியை காட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் ஜெயக்குமாரை செய்தங்கநல்லூர் போலீசார் கைது செய்தனர்.