தூத்துக்குடி அருகே மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை.



தூத்துக்குடி முத்தையாபுரம் அய்யன் கோவில் சேர்ந்தபகுதியை சேர்ந்த திரவியம் என்பவரின் மனைவி வள்ளியம்மாள்(66), வள்ளியம்மாளின் கணவர் திரவியம் இறந்துவிட்ட நிலையில் வள்ளியம்மாள் தனது உறவினரான ராஜ்குமார்(61) என்பவருடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் ராஜ்குமார் தனது குடும்பத்துடன் அத்திமரப்பட்டியில் வேறு வீட்டுக்கு சென்றுள்ளார் இதனால்  வள்ளியம்மாள் உணவுக்கு கூட வழி இன்றி கஷ்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது, இதனால் மனவிரத்தில் இருந்து வந்த வள்ளியம்மாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.