தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் நள்ளிரவில் கஞ்சா போதையில் வாலிபர் சாலையில் நின்ற கார் மற்றும் குட்டி யானை என 7 வாகன கண்ணாடிகளை உடைத்து அட்டகாசம் கஞ்சா போதை வாலிபரை கைது செய்து வடபாகம் காவல்துறையினர் விசாரணை! தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள சுந்தர் ராமபுரம் மற்றும் கதிரேசன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில்,நேற்றுமுன்தினம் நள்ளிரவில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7க்கும் மேற்பட்ட கார் மற்றும் குட்டி யானை ஆகியவற்றின் கண்ணாடியை கஞ்சா போதையில் வாலிபர் ஒருவர் உடைத்து நொறுக்கியுள்ளார். இதை அடுத்து காலையில் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த காரின் உரிமையாளர்கள் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இதைத்தொடர்ந்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியதில் கஞ்சா போதையில் ஒரு வாலிபர் தொடர்ச்சியாக அந்தப் பகுதியில் உள்ள கார்களின் கண்ணாடி மீது கல்லை போட்டு உடைத்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த வாலிபரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் கஞ்சா போதையில் வாலிபர் கார் கண்ணாடிகளை உடைத்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் கஞ்சா போதையில் ரகளை செய்து 7 வாகன கண்ணாடிகளை உடைத்த இளைஞர் கைது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
படகை விடுவித்தால் தான் சொந்த ஊருக்கு செல்வோம் மாலத்தீவு கடற்பறையால் கைது செய்யப்பட்ட தருவைகுளம் மீனவர்கள் மாலத்தீவிலே தஞ்சம்!
அடுத்த
கட்டிட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் இல்லை? தமிழக அரசுக்கு தபால் கார்டு அனுப்பும் போராட்டம்.
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026