தூத்துக்குடி- மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 12 மீனவர்களும் மாலத்தீவு அரசு விடுவித்தும் பறிமுதல் செய்த விசைப்படகை விடுவிக்காததால் படகை விடுவித்தால் தான் சொந்த ஊருக்கு செல்வோம் எனக்கூறி மீனவர்கள் மாலத்தீவிலேயே இருந்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்திலிருந்து 12 மீனவர்கள் விசைப்படகு மூலம் ஆழ்கடல் மீன்பிடிப்பில் அரபிக் கடல் பகுதியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது மாலத்தீவு  கடற் பகுதி அருகே இந்திய எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்போது அங்கு வந்த மாலத்தீவு கடற்படையினர் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 மீனவர்களையும் கைது செய்ததுடன் அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தனர் இதை தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவரங்குறித்து கடந்த 2 7ஆம் தேதி தருவைகுளம் மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதை அடுத்து தருவைகுளம் மீனவ சங்கப் பிரதிநிதிகள் மற்றும் கைது செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் மத்திய மாநில அரசுகள் இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது விசைப்படகையும் மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில் மாலத்தீவு அரசு மற்றும் கடற்படை கைது செய்த 12 மீனவர்களை மட்டும் விடுவித்துடன் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகை விடுவிக்க மறுத்து வருகிறது இதன் காரணமாக தங்கள் வாழ்வாதாரம் இழந்துள்ள 12 மீனவர்களும் தங்களோடு சேர்த்து விசைப்படகையும் விடுவித்தால் தான் தாங்கள் சொந்த ஊரான தருவை குளத்திற்கு திரும்பிச் செல்வோம் என மாலத்தீவிலேயே இருந்து வருவதாக கூறப்படுகிறது எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக  விடுவிக்கப்பட்ட மீனவர்களுடன் விசைப்படகையும் சேர்த்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.