கயத்தாறு அருகே இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அய்யனார்ஊத்து கிராமத்தை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மகள் பிரியா (18), இவரப் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார், இந்நிலையில் வீட்டிலிருந்த பிரியா விஷம் அருந்தியுள்ளார், இதனை அடுத்து வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக பிரியாவை, நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தனர்,அங்கு சிகிச்சை பலனின்றி பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.