தூத்துக்குடி மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரியில் 7 ஆண்டுகள் குர்ஆன் படித்து முடித்த மாணவர்களுக்கு மவுலவி ஆலிம் மஸ்லஹி பட்டமளிப்பு விழா !


தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரியில் 7 ஆண்டுகள் குர்ஆன் படித்து முடித்த மாணவர்களுக்கு மவுலவி ஆலிம் மஸ்லஹி பட்டமளிப்பு விழா நடைபெற்றது.‌ விழாவுக்கு அரபிக் கல்லூரி முதல்வர் இம்தாதுல்லாஹ் பாஜில் பாகவி தலைமை தாங்கினார். முன்னாள் துறைமுகபள்ளிவாசல் இமாம் என்.எம்.கே.நூருல்லாஹ் ஆலிம்,ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் மீராசா, ஆகியோர் 7 ஆண்டுகள் குர்ஆன் படித்து முடித்த மாணவர்களுக்கு மவுலவி ஆலிம் மஸ்லஹி பட்டம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை செயலாளர் ரகுமான், துணைத் தலைவர் சாகுல் சிராஜுதீன், அரசு காஜிமுஜிபுர் ரகுமான் ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல்அழிம்,சதக்கத்துல்லா, மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி துணை முதல்வர் அஸ்ரார் அகமது உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டனர்.