விளாத்திகுளம் பகுதி திருட்டுமணல் கும்பலுக்கு ஆதரவாக செய்தியாளரை மிரட்டும் காவலர்!
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அகவன் மீடியா செய்தி தளத்தில் சங்கரலிங்கபுரம் காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் மற்றும் தனிப்பிரிவு காவலர் செல்வக்குமார் இருவரும் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டது குறித்து 26.08.2023 அன்று வெளியிடப்பட்ட செய்திக்காக தற்போது அந்த காவலர் செல்வக்குமார் அகவன் மீடியா செய்தியாளருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு செய்தி வெளியிட்டதற்காக மிரட்டல் விடுத்துள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட சங்கரலிங்கபுரம் காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் மற்றும் தனிப்பிரிவுக் காவலர் செல்வகுமார் ஆகிய இருவரும் மாட்டு வண்டி மூலம் ஆற்று மணல் திருடுபவர்களிடம் லஞ்சம் வாங்கியதாக கிடைத்த ரகசிய தகவல் மற்றும் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்தில் வைத்து பெண் உதவி ஆய்வாளர் மற்றும் தனி பிரிவு காவலர் செல்வகுமாரிடம் இந்த விசாரணை நடத்தி இருவரையும் ஆயுதப் படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். இது தொடர்பாக அகவன் மீடியா செய்தி தளத்தில் 26.08.2023 அன்று செய்தி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணிபுரிந்து ஆயுதப் படைப்பு மாற்றம் செய்யப்பட்ட செல்வக்குமார் தற்போது மணியாச்சி காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பசுவந்தனை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஆயுதப் படைக்கு மாற்றம் செய்யப்பட்டது குறித்து கடந்த 26.08.2023 கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அகவன் மீடியாவில் வெளியிட்ட செய்திக்காக அகவன் மீடியா செய்தியாளரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு "யோவ் நீ எப்படி செய்தி போடலாம்..?, எந்த ஊரு உனக்கு" என்றெல்லாம் செல்போனில் மிரட்டும் தொனியில் பேசி மிரட்டியுள்ளார்..
(குறிப்பாக... சமீபத்தில் விளாத்திகுளம் காவல் உட்கோட்டத்தில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கொள்ளை நடைபெறுவது குறித்து அகவன் மீடியாவில் கட்டுரையாக செய்தி வெளியிடப்பட்டது. அதற்கு மணல் கொள்ளையர்கள் உட்பட பல தரப்பினரிடமிருந்தும் தொடர்ச்சியாக மிரட்டல்கள் வந்தவண்ணம் இருந்த நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு மாட்டுவண்டிகள் மூலம் மணல் திருடுபவர்களிடமிருந்து லஞ்சம் வாங்கியதற்காக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்ட சங்கரலிங்கபுரம் காவல் நிலைய தனிப்பிரிவுக் காவலர் செல்வக்குமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது அகவன் மீடியாவை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்திருப்பது அண்மையில் வெளியிட்ட ஆற்று மணல் கொள்ளை செய்தியின் வெளிப்பாடாக மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாகத்தானா?, காவலர் மூலமாகவே மணல் கொள்ளையர்கள் மிரட்டல் விடுக்கின்றனரா? போன்ற பல்வேறு சந்தேகத்தை கிளப்புகிறது... எனவே, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், செய்தியாளரை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டிய பசுவந்தனை காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் செல்வகுமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது...)