தூத்துக்குடியில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1000/- அபராதம் விதித்து 2 தீர்ப்பு!.


தூத்துக்குடி - தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு குடும்ப பிரச்சனை காரணமாக தாளமுத்துநகர் பாக்கியநாதன்விளை பகுதியை சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் மாரிமுத்து (52) என்பவரை கொலை செய்த வழக்கில் மேற்படி இறந்துபோன மாரிமுத்துவின் மருமகனான திருநெல்வேலி பாபநாசம் பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் காளிராஜ் (49) என்பவரை தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் -2  நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி திருமதி. ப்ரீத்தா அவர்கள் இன்று  (21.01.2025) குற்றவாளியான காளிராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.