தூத்துக்குடி மாவட்டம் ஜீரோ சதவீதம் போதை பொருட்கள் புழக்கம் மற்றும் கடத்தல் இல்லாத மாவட்டமாக மாற்றப்படும் என புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி பேட்டி! தூத்துக்குடி மாவட்ட 27 வது ஆட்சியராக இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கோ லட்சுமிபதி பதவியேற்றுக்கொண்டார் பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறுகையில் அரசின் பல்வேறு திட்டங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து முன்னுரிமை அளிக்கப்படும் அடிப்படை தேவைகளான குடிநீர் சாலை வசதி சுகாதார வசதி ஆகியவை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் போதை பொருள் புழக்கம் மற்றும் கடத்தல் ஆகியவை ஜீரோ சதவீத அளவிற்கு முற்றிலுமாக இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில் காவல்துறையிடன் இணைந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று பேட்டியளித்தார்.மேலும் அவர் கூறுகையில் கூறுகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வெகு சிறப்பாக நடைபெறும் குலசேகரப்பட்டணம் முத்தாரம்மன் ஆலய தசரா திருவிழா திருவிழா சிறப்பாக செயல்படுத்த அனைத்து துறை அலுவலர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இது தொடர்பாக திருச்செந்தூரில் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
தூத்துக்குடி
போதைப்பொருள் மற்றும் கடத்தல் இல்லாத மாவட்டமாக மாற்றப்படும் - ஆட்சியர் லட்சுமிபதி பேட்டி!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பல மணி நேரம் காத்துக்கிடக்கும் நோயாளிகள்: அமைச்சர் மா.சு. ஆய்வுக்கு பின்னும் இதே நிலைதானா?
அடுத்த
கண்டெய்னர் லாரி மீது - கார் மோதல் - 1வயது குழந்தை உள்பட 5 பேர் காயம்.
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026