விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை: பல மணி நேரம் காத்துக்கிடக்கும் நோயாளிகள்: அமைச்சர் மா.சு. ஆய்வுக்கும் பின்னும் இதே நிலைதானா?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில், போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் இங்கு சிகிச்சை பெற வருகின்ற நூற்றுக்கணக்கான நோயாளிகள் பல மணி நேரமாக கால்கடுக்க நின்று காத்திருக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே மருத்துவர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்த நிலையில் தற்போது ஒரே ஒரு பெண் மருத்துவர் மட்டுமே நோயாளிகளுக்கு சிகிச்சைகள் அளித்து வருகிறார். இதனால், ஏராளமான நோயாளிகள் நீண்ட நேரமாக மருத்துவர் அறை முன்பாக சிகிச்சை பெறுவதற்கு நின்று அவதியுற்று வருகின்றனர்.
அதுமட்டுமின்றி தொடர்ந்து இம்மருத்துவமனையில் இதே நிலைதான் நீடித்து வருவதால் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள 250 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்குள்ளாக்கப் படுகின்றனர்.
இதிலும் குறிப்பாக..... சமீபத்தில் தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது இங்கு பழுதடைந்துள்ள மருத்துவ உபகரணங்களுக்கு பதிலாக புதியது வழங்குவதோடு, காலியாக இருக்கும் மருத்துவர்கள், பணியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று உறுதியளித்துச் சென்ற நிலையிலும்....இங்கு இதே அவல நிலை தொடர்ந்து வருவதுதான் பொது மக்கள் மத்தியில் அரசின் மீதும், அரசு மருத்துவமனைகள் மீதும் கடும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
இதன் காரணமாக உடனடியாக விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் நியமனம் செய்வதோடு மட்டுமின்றி அவர்கள் தினமும் மருத்துவமனைக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என்பது அனைவரது எதிர்ப்பாக உள்ளது.
தூத்துக்குடி
பல மணி நேரம் காத்துக்கிடக்கும் நோயாளிகள்: அமைச்சர் மா.சு. ஆய்வுக்கு பின்னும் இதே நிலைதானா?
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
6 மாதங்களாக பயன்பாட்டிற்கு வராத நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை.
அடுத்த
போதைப்பொருள் மற்றும் கடத்தல் இல்லாத மாவட்டமாக மாற்றப்படும் - ஆட்சியர் லட்சுமிபதி பேட்டி!
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026