திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாவட்ட காவல் SP நேரில் ஆய்வு!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் குபேர பௌர்ணமி பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலில் தரிசனத்திற்காக குவிந்தனர்.இதனை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, 9 காவல் ஆய்வாளர்கள், 26 உதவி ஆய்வாளர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கடற்கரை பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.