விளாத்திகுளம் அருகே முதியவர் வெட்டிக்கொலை?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட தருவைகுளம்- பட்டினமருதூர் பகுதியை சேர்ந்த மூக்கன் மகன் சண்முகசுந்தரம்(54), இவரது காணாமல் போன இரு மாடுகளை தேடிச் சென்ற சண்முகசுந்தரம் ,வீடு திரும்பாத நிலையில் வீட்டில் உள்ளோர் சண்முகசுந்தரத்தை தேடி சென்று பார்த்தபோது,அவர் காட்டுப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். இதை அடுத்து உடலை கைப்பற்றிய தருவைகுளம் காவல் நிலைய போலீசார் உடலை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத ஆய்வுக்கு அனுப்பி வைத்து, கொலைக்கான காரணங்கள்? கொலையாளி யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...