தூத்துக்குடி வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!



மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய மாநாடு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது இந்த மாநாட்டில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் பசுமை மீள் தொடக்கம் என்று ஆலை நிர்வாகம் சார்பாக அண்ணா யுனிவர்சிட்டி ஓய்வு பெற்ற பேராசிரியர் சார்பாக கொடுத்திருக்கும் அறிக்கையை அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது ஆலையை நிரந்தரமாக மூட வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


இந்தியாவின் அனைத்து மாநிலத்தில் இருந்தும்  மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின்  பிரதிநிதிகள் ஜார்கட் மாநிலம் ராஞ்சியில் மாநாட்டிற்கு வருகை தந்திருக்கிறார்கள்  தமிழகத்தில் இருந்து சுமார் 50 பிரதிநிதிகள் கலந்து கொண்டு இருக்கிறார்கள் மற்றும் pucl உடைய தேசிய குழு உறுப்பினர்கள் தோழர் டி.எஸ்.எஸ்.மணி தோழர் பேராசிரியர் சங்கர் லிங்கம் தோழர் பாலமுருகன் தேசிய பொதுச்செயலாளர் சுரேஷ் தேசிய துணை தலைவர் பேராசிரியர் சரஸ்வதி அவர்கள் தேசிய தலைவர் கவிதா,மதுரை வழக்கறிஞர் ஜான் வின்சென்ட், கோவை வழக்கறிஞர் மலரவன் காஞ்சிபுரம் விஜயா, சென்னை மீரா,சென்னை முகேஷ்,தூத்துக்குடி காந்தி மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் பியூசியல் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.    

அதுபோல தேசிய அளவில் அனைத்து மாநிலத்தின் உடைய பி யு சி எல் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு இருக்கிறார்கள் மாநாடு தொடர்ச்சியாக மூன்று நாள் நடைபெற்றது, அகில இந்திய அளவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,

அதில் நாட்டினுடைய முக்கிய பிரதிநிதிகள் பல்வேறு சமூக பிரச்சனைகள் குறித்தும் பல்வேறு ஒடுக்கு முறைகள் குறித்தும் மனித உரிமை மீறல் குறித்தும் கலந்தாய்வு நடை பெற்றது மாநாட்டிற்கு வருகை தருக்கும் பிரதிநிதிகள் அனைவருக்கும் தங்கும் இடம் உண்ண உணவு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது.  

இந்திய அரசியலமைப்பு வழங்கப்பட்டிருக்கின்ற அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கப்பட வேண்டும் ஆதிவாசிகள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் அவர்களுடைய வாழ்வாதாரம் மேல்மடைய வேண்டும் அவர்கள் வாழ்கின்ற காடு பகுதிகளை அளிக்கக்கூடாது அவர்கள் அவர்களது உரிமைகளை அவர்களிடம் கேட்டு அதற்கு ஏற்றது போல அரசு நடந்து கொள்ள வேண்டும், அவருடைய தலைமைத்துவத்தை அரசியலில் தேசிய அளவில் பிரதிபலிக்க வேண்டும் அவர்களுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்,மீனவர்களுடைய வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும், அவர்களுடைய மீன் வளம் தொழில் முற்றிலும் அழிந்து வருகிறது, அதை அரசு மீட்டெடுக்க வேண்டும், அவர்களுக்கு ஏற்படும் மனித உரிமை மீறல்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அவர்கள் வாழ்வில் வளம் பெறுவதற்கு அவர்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவ அடிப்படையில் தனி  இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும், கடல் பகுதிகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசு வழங்கக் கூடாது கடல் பரப்புகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கினால் அவருடைய மீன் பிடி தொழில் முற்றிலும் அழிந்து நாசமாகிவிடும் அவருடைய வாழ்வாதாரம் அழிந்துவிடும் எனவே அரசு எந்த காரணத்தை கொண்டும் கடல் பரப்பளவை கடல் பகுதியை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு  குத்தகை மற்றும் சொந்தமாகவோ வழங்கக்கூடாது,தோழர் டி எஸ் எஸ் மணி  பேசும்போது மத்திய அரசு தற்போது மிகவும் பலவீனமாக இருக்கிறது பலவீனமாக இருக்கும் காரணத்தினால் ஜனநாயகத்திற்கு உரிமைகளுக்கு ஆனபோராட்டத்தை கண்டு பீதி அடைந்து பீதி அடைந்ததனால் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகிறது, பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஆளுங்கட்சியை போல் சிந்திக்கின்றனர், அதனால் சிவில் உரிமை தளத்திலிருந்து தாக்கும் தன்மை கொண்ட இயக்கங்களை முன்னெடுக்க வேண்டும், இவ்வாறு பேசினார் தொடர்ச்சியாக கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது நாளையும் இக்கூற்றம் தொடர்ச்சியாக நடைபெறும் ராஞ்சியில் இருந்து தூத்துக்குடி தோழர் காந்தி கலந்து கொண்டார். 

தூத்துக்குடி வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் கொடுத்த அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.