தூத்துக்குடியில் சாலை விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழப்பு.



தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல் என்பவரின் மகன் பிச்சையாபாண்டி (58), இவர் தூத்துக்குடி துறைமுக சாலையில் லாரியை நிறுத்திவிட்டு சாலையை கடக்கும் முன்றயபோது அவ்வழியாக வந்த கார் பிச்சையாபாண்டி மீது மோதியதில் பலத்த காயம் அடைந்த பிச்சையாபாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தெர்மல் நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.