தூத்துக்குடியில் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர் மரணம் - தொடரும் போராட்டம் !


தூத்துக்குடி முத்தையாபுரம் தங்கமணி நகர் பகுதி சுடலை என்பவரின் மகன் அசோக்குமார் (46),இவர் தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் இவர் கடந்த 7 வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் பிளம்பர்ஆக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அனல்மின் நிலையத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அசோக்குமார் மயங்கி கீழே விழுந்துள்ளார், இதனை அடுத்து உடன் இருந்தவர்கள், அசோக்குமாரை மீட்டு தூத்துக்குடி வ உ சி துறைமுகம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அசோக்குமாரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து தொ்மல் நகா் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அசோக்குமாரின் உடலை பிரேத ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் அசோக்குமாரின் மரணத்திற்கு உரிய நீதி வேண்டும், குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுக அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை முன் வைத்து அவரின் உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அனல் மின் நிலையத்தின் முன்பு 2 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்…