தூத்துக்குடியில் நிலக்கரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து!
தூத்துக்குடி துறைமுக சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திலிருந்து துறைமுகத்திற்கு நிலக்கரி ஏற்றி சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஓட்டுநர் கருப்பசாமி (45) சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்துக்கு குறித்து தெர்மல் நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்குள்ளான லாரியில் இருந்த நிலக்கரியின் மதிப்பு பல லட்சம் என கூறப்படுகிறது.