தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சவேரியார்புரம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் மைக்கேல்ராஜ் (51), இவரது மகன் பிரான்சிஸ் (26), பிரான்சிஸ் வேலைக்கு செல்லாமல் மது குடிப்பதையே வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பிரான்சிஸை தந்தை மைக்கேல்ராஜ் மது அருந்தாமல் வேலைக்கு செல்லுமாறு பலமுறை கண்டித்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் மது அருந்திவிட்டு வந்த பிரான்சிஸை தந்தை மைக்கேல் ராஜ் கண்டித்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த பிரான்சிஸ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தந்தை மைக்கேல்ராஜை மது போதையில் வெறித்தனமாக குத்தியுள்ளார். இதில் காயமடைந்த மைக்கேல்ராஜை அக்கம் பக்கத்தினர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும் தந்தையை குத்திய மகன் பிரான்சிஸை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி
தந்தையை கத்தியால் குத்திய மகன் கைது: மது போதையில் வெறிச்செயல்!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த கணவர்!
அடுத்த
வட்டாட்சியர் தலைமையில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து சிறப்பு பயிற்சி முகாம்!
இதையும் படிக்கலாம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி உட்பட மூன்று பேர் கைது!
30 Sep 2026
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026