மனைவியை கழுத்தை நெறித்து  கொலை செய்த கணவர்!

தூத்துக்குடி அருகே உள்ள மேலஆத்தூர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (37), வாடகை கார் ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி பொன்மாரி வயது (32) இந்ததம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். பொன்மாரிக்கும் கணவர் ஜெயக்குமாருக்கும் அடிக்கடி வீட்டில் பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 24-05-2024 இரவு இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மனைவி பொன்மாரியை ஜெயக்குமார் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.இது குறித்து ஆத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியை கழுத்தை நெறித்து  கொலை செய்த சம்பவம் ஆத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.