தூத்துக்குடியில் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபருக்கு   போலீசார் வலைவீச்சு!




தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கல்லாத்து ஸ்ரீ முனியசாமி திருக்கோவிலில், கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த 5000 ரூபாய் காணாமல் போனது குறித்து  கோவில் பூசாரி அளித்த புகாரின் பேரில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கோவிலின் காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து உண்டியலை உடைத்து ரூபாய் 5000 பணத்தை ஒரு மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் அந்த மர்ம நபரை  வலை வீசி தேடி வருகின்றனர்.