தூத்துக்குடியில் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை!
தூத்துக்குடி கோமஸ்புரம் பகுதியில் சேர்ந்தவர் மதியரசன் என்பவரின் மகன் தமிழரசன் (25), இவரது மனைவி ------ (21), கணவன் மனைவி இடையே பிரச்சனை காரணமாக சில நாட்களுக்கு முன்பு ------ தனது தாயார் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது, இதனால் மன விரக்தியிலிருந்து தமிழரசன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.