ஆதரவற்ற பெண்களுக்கு ரூபாய் 50,000 விரைவில் நிதி உதவி வழங்கப்படும்: தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் தகவல் !
தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூலம் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார் அப்போது அவர் பேசும்போது தமிழகத்தில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களை சமுதாயம் கைவிட்டு விடக்கூடாது என்பதற்காக அவர்கள் சுயதொழில் செய்வதற்காக தமிழ்நாட்டில் 200 பெண்களுக்கு 50,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
நடைபெற்ற கருத்தரங்கு கூட்டத்தில் ஏராளமான பெண்கள் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.