தூத்துக்குடி பாகம் பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் ஆலயத்தில் அம்பாள் பரிவார மூர்த்திகள் வீதி உலா!
தூத்துக்குடி பாகம் பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக சுவாமி மற்றும் அம்பாள் பரிவார மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதி உலா ஏராளமான பக்தர்கள் வழிபாடு!
தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம் பெரியால் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் சித்திரைத் திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக சங்கர ராமேஸ்வரர் மற்றும் அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு புருஷ வாகனத்திலும் பாகம்பிரியால் காமதேனு வாகனத்திலும் பரிவார மூர்த்திகளான விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை உடன் எழுந்தருளி கைலாய வாத்தியம் முழங்க வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் அம்பாளை வழிபட்டு சென்றனர்.