சட்டவிரோதமாக பணத்திற்காக சீட்டு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது - ரொக்க பணம் சுமார் 3,67,000/- சீட்டு கட்டுகள் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பிரபு பாஸ்கர் தலைமையில் உதவி ஆய்வாளர் முகேஷ் அரவிந்த் மற்றும் போலீசார் கடந்த 13.01.2026 மாலை குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லாமொழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு தூத்துக்குடியைச் சேர்ந்தவர்களான விநாயக சுந்தர் (50), தளவாய் (58), சரவணன் (42), இலங்காமணி (46), முத்துராமலிங்கம் (62), ராஜகோபால் (33), கருப்பசாமி (37), பிரபு (44), நடராஜன் (50), இளங்கோ (50), அஜித்குமார் (35), கார்த்திகேயன் (46) மற்றும் சேரன் (58) ஆகிய13 நபர்கள் சேர்ந்து சட்டவிரோதமாக பணத்திற்காக சீட்டு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பிரபு பாஸ்கர் வழக்குபதிவு செய்து மேற்படி 13 நபர்களையும் கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 3,67,000/- ரொக்கப்பணம், சீட்டுக் கட்டுகள் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு இதுபோன்று சட்ட விரோதமாக பணத்திற்காக சீட்டு வைத்து சூதாட்டத்தில் ஈடுபவர்கள், பொது இடத்தில் மது அருந்தி பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பர்கள் போன்ற சட்டவிராத செயல்களில் ஈடுபடுவர்கள் மீது காவல்துறையினர் தனிக்கவனம் செலுத்தி தீவிர ரோந்து பணி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்படி சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.