முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரிவாளை வைத்து தகராறில் ஈடுபட்ட ரவுடி கைது.


தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் தில்லை நாகராஜன் தலைமையிலான போலீசார் கடந்த 14.01.2026 முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் மணக்கரையை சேர்ந்த பார்வதிநாதன் (27) என்பதும் அவரிடம் பெரிய அரிவாள் இருந்ததும் தெரியவந்தது.


இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜன் வழக்கு பதிவு செய்து மேற்படி எதிரி பார்வதிநாதனை கைது செய்து அவரிடமிருந்து ஒரு அரிவாளை பறிமுதல் செய்தார்.


மேலும் மேற்படி எதிரி மீது ஏற்கனவே தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.