பாச உணர்ச்சிக்கு அளவே இல்லை : தூத்துக்குடியில் காணாமல் போன பூனையை கண்டுபிடித்து தர போஸ்டர் அடித்த பூனையின் உரிமையாளர்!




தூத்துக்குடி புதுக்கிராமம் பகுதிகளில் அனைவரும் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், காணாமல் போன நான் பாசத்துடன் வளர்த்த எனது செல்லப் பூனையை  கண்டுபிடித்து கொடுத்தால், கண்டுபிடித்து தருபவருக்கு ரூபாய் 5000 சன்மானப் பரிசுத்தகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அந்த போஸ்டரில்  காணாமல் போன பூனை கழுத்தில் ஆரஞ்சு மட்டும் சில்வர் கலர் பெல்ட்டுடன் இணைத்து மணி அணிந்திருக்கும் என  அடையாளங்கள் மற்றும் பூனையின்  உரிமையாளரின் செல்போன் எண் குறிப்பிடப்பட்டுள்ளது. என்னதான்  வீட்டில் செல்லப்பிராணிகள் பலரும்   வளர்த்தாலும்,  தூத்துக்குடியில் தனது காணாமல் போன செல்லப்பிராணி பூனைக்கு  போஸ்டர் அடித்து காணாமல் போன  பூனையை கண்டுபிடிக்க தனது பாச போராட்டத்தை வெளிப்படுத்திய  பெயர் தெரியாத அந்த பூனையின் உரிமையாளர்  அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.