தூத்துக்குடி அருகே புரோட்டா மாஸ்டர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.
தூத்துக்குடி மேல தட்டபாறை பகுதியைச் சேர்ந்த பெருமாள் (42), இவர் அந்தபகுதியில் உள்ள புரோட்டா மாஸ்டர் ஆக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மது அருந்திவிட்டு தனது நண்பர்களுடன் கோரம்பள்ளம் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது, ஆழமான பகுதிக்கு சென்ற பெருமாள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் பெருமாள் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.