தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.


தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாந்திர மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானிடம் பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்கள் அளித்தனர், தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் புகார் அளித்த 6 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 65 மனுதாரர்கள் என மொத்தம் பொதுமக்களிடம் வந்த 71 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.