தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் ஒருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!



தூத்துக்குடி தாளமுத்துநகர் டி.சவேரியாபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் மணிகண்டன் (34), இவர் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கைதான நிலையில்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி  தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசார் மணிகண்டனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.